

அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படவுள்ளது.
அதிமுக கட்சிக்குள் ‘ஒற்றைத் தலைமை’ பிரச்னை பூதாகரமாகியுள்ள நிலையில், பொதுக்குழு நாளை திட்டமிட்டபடி நடைபெறும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கக்கூடாது எனக் கூறி காவல் நிலையத்தில் ஓபிஎஸ் தரப்பினர் அளித்த மனுவுக்கு காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளனர். மேலும், பொதுக்குழுவுக்கு தடைக்கோரிய வழக்கு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், ஓபிஎஸுக்கு ஆதரவளித்த மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ் பக்கம் தாவி வரும் சூழலில், அதிமுக நிர்வாகிகள் யாரும் பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்ளக் வேண்டாம் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
மேலும், நாளை நடைபெறவுள்ள பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.