சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

நெல்லையில் உள்ள விடுதியில் அவர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் தேநீர் அருந்தினார்.

News image
உக்ரைனிலிருந்து திரும்பிய மாணவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
Updated On :7 மார்ச் 2022, 2:24 pm

DIN

உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவ மாணவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடினார். உக்ரைனிலிருந்து திரும்பிய அனுபவத்தையும், அவர்களது கோரிக்கையையும் கேட்டறிந்தார். 

உக்ரைன் மீது ரஷியா போர்த்தொடுத்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் தாயகம் திரும்பினர்.

இந்நிலையில், அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். நெல்லையில் உள்ள விடுதியில் அவர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் தேநீர் அருந்தினார்.
 
அதனைத்தொடர்ந்து உக்ரைன் போரில் மாணவர்களுடைய அனுபவங்கள் குறித்தும், அவர்களுடைய கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.