தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கான தடை நீக்கம்

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தவிட்டுள்ளார்.
தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கான தடை நீக்கம்

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படுவதாக மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் உத்தவிட்டுள்ளார்.

தருமபுரம் ஆதீன திருமடத்தில் ஆதீன குருமுதல்வர் குருபூஜையையொட்டி வருகின்ற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டணப் பிரவேச நிகழ்வில் ஆதின குருமகா சந்நிதானத்தை பல்லக்கில் அமர்த்தி மனிதர்கள் சுமந்து செல்ல தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி கடந்த மாதம் 27-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார். இந்த அறிவிப்பு பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தமிழக சட்டப் பேரவையில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் கேள்வி எழுப்பினா்.

இதற்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பதிலளிக்கையில், வரும் 22-ஆம் தேதி தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் பவனி வரும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

நீதிமன்றத்துக்கும் இந்தப் பிரச்னையை கொண்டு சென்றிருக்கிறாா்கள். நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பை ஏற்று செயல்படுவோம். அதேசமயம், மனிதாபிமானமற்ற, மனிதனை மனிதன் சுமக்கும் சடங்குகள் இல்லாமலும், அதேசமயம் பட்டணப் பிரவேசம் தடைபடாமல் துலாக்கோல் போன்று முதல்வா் முடிவெடுப்பாா். இந்த நிகழ்வு நடைபெறுவதற்கு நாள்கள் இருக்கின்றன. ஆதீனத்துடன் அரசு பேசி சுமுக நிலையை எடுக்கும் என்றாா் அமைச்சா் பி.கே.சேகா்பாபு.

இதனிடையே பட்டணப் பிரவேசத்திற்கு விதித்த தடையை நீக்க முதல்வரை நேரில் சந்தித்து ஆதீனங்கள் கோரிக்கை விடுத்தனர். 

இந்நிலையில், "மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் 2022-ஆம் ஆண்டிற்கான பட்டினப்பிரவேச விழாவில் தருமபுரம் ஆதீனகர்த்தரை பல்லக்கில் வைத்து மனிதர்கள் தூக்கிச் செல்லும் நிகழ்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு விலக்கிக்கொள்ளப்படுவதாக கோட்டாட்சியர் பாலாஜி அறிவித்துள்ளார். 

தடை நீக்கப்பட்டதை தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி பட்டணப் பிரவேச நிகழ்வு நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com