இதுதான் திராவிட மாடல்: பிரதமர் மோடிக்கு விளக்கிய முதல்வர் ஸ்டாலின்

​சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் திராவிட மாடல் ஆட்சி குறித்த விளக்கத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்தார். 
இதுதான் திராவிட மாடல்: பிரதமர் மோடிக்கு விளக்கிய முதல்வர் ஸ்டாலின்


சென்னை நேரு மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் திராவிட மாடல் ஆட்சி குறித்த விளக்கத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்துரைத்தார். 

சென்னையில் நடைபெறும் ரூ. 31 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைத் தொடக்கிவைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி, முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலை உரையாற்றினார். உரையின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ஆர்.என். ரவி உள்ளிட்டோரை வரவேற்றார் முதல்வர்.

இதன்பிறகு, அவர் பேசியதாவது:

"திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பிரதமர் மோடி பங்கேற்கக்கூடிய முதல் அரசுவிழா இது. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை தொடக்கிவைப்பதற்காக வருகை தந்துள்ளமைக்கு தமிழ்நாடு மக்கள் சார்பிலும், முதல்வர் என்ற அடிப்படையிலும் பிரதமருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரதமர் தொடக்கிவைக்கவுள்ள திட்டங்கள் அனைத்தும் மிக முக்கியமானத் திட்டங்கள்.

தமிழ்நாடு பல்வேறு வகைகளில் ஒரு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டினுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் அளித்து வருகிறது. நாட்டு வளர்ச்சியில் தமிழ்நாட்டினருடைய வளர்ச்சி மிகமிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது.

மற்ற மாநிலங்களின் வளர்ச்சியைவிட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவமிக்கது. பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல. சமூக நீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம் போன்ற அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் தமிழ்நாட்டினுடைய வளர்ச்சி.

பொருளாதார வளர்ச்சி, கிராமப்புற சுகாதாரத் துறை சிறப்பாக செயல்படுவது, பெரிய எண்ணிக்கையில் கல்வி நிலையங்கள் இருப்பது, திறன் மிகுந்த மனித வளங்களில் தமிழ்நாடு முன்னணி மாநிலம். பொருளாதார மற்றும் இதர விஷயங்களில் மட்டுமல்ல சமூக நீதி, சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் உள்ளிட்டவற்றுக்கும் தமிழ்நாடு முன்மாதிரி.

அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியைக் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. இதுதான் திராவிட மாடல்" என்றார் முதல்வர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com