/

கனமழை எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:20 pm IST

சென்னையில் பெய்து வரும் கனமழை எதிரொலியாக 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலு குறைந்து, குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக தமிழகம், புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நிலவுகிறது. சென்னையில் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், சென்னை, விமான நிலையத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இருந்து செல்லக்கூடிய 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மதுரை, ஹைதராபாத், கர்னூல் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.