மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

நடிகை காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து இடைநீக்கம்!

நடிகை காயத்ரி ரகுராமனை பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

News image

படம்: முகநூல்/காயத்ரி ரகுராம்

Updated On :1 பிப்ரவரி 2024, 4:24 pm IST

நடிகை காயத்ரி ரகுராமனை பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்து கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

பாஜக சிறுபான்மையினர் அணி தலைவராக இருக்கும் டெய்சி சரணை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அக்கட்சியின் ஓபிசி மாநில தலைவர் திருச்சி சூர்யா சிவா அவதூறாக பேசும் ஆடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆடியோ குறித்து விசாரணை நடத்தி கட்சியின் தலைமைக்கு 7 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார். அதுவரை பாஜக நிகழ்ச்சிகளில் திருச்சி சூர்யா சிவா பங்கேற்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருச்சி சூர்யாவின் பேச்சுக்கு காயத்ரி ரகுராமன் எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்கியது தவறு என்று அண்ணாமலையை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலில் தொடர்ச்சியாக ஈடுபடுவதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்படுவதாலும், 6 மாத காலம் காயத்ரி ரகுராமன் இடைநீக்கம் செய்யப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் வகித்து வந்த பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.