மதுரை அரசு மருத்துவமனையில் தனது குழந்தைக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்ததாக காவல்நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.கே.நகர் காலனி அமீர்பாளையம் பகுதியை சேர்ந்த அஜித்குமார்(25). இவரது மனைவி கார்த்திகா(23). இவர்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்து நாக்கு வளர்ச்சி இல்லாத நிலையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால் கடந்த ஆண்டு நாக்கில் அறுவை சிகிச்சை செய்தனர்.
ஓராண்டு கழித்து மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மீண்டும் நேற்று அறுவை சிகிச்சை செய்ய அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது மீண்டும் நாக்கில் அறுவை சிகிச்சை செய்ததாக குழந்தையின் தந்தை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து குழந்தையின் தந்தை மதுரை அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஒரு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சையை மாற்றிய செய்த அதிர்ச்சி சம்பவம் எதிரொலியாக சைல்டு்லைன் அதிகாரிகளும் மருத்துவமனையில் விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சிறுமளஞ்சியில் அரசுப் பேருந்து சிறைபிடிப்பு

நான்குனேரி வானமாமலை கோயிலில் தங்கத்தோ் வெள்ளோட்டம்

மொழி, நிதி உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

நெல்லை மாநகர காவல் ஆணையா் பொறுப்பேற்பு
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

