ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தபோது தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் திருச்சியில் இருந்து சென்னைக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு ஏசி பெட்டியில் நேற்று இரவு பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து, ரயில்வே போலீசார் காவல் ஆய்வாளர் அருண்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் தனசேகரன், அமைச்சரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்று சிதம்பரம் அண்ணாமலை நகர் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரத்த அழுத்தம் காரணமாக உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து ஆம்புலன்ஸ் உதவியுடன் அவர் தற்போது கார் மூலமாக சென்னை அழைத்துச் செல்லப்படுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிமுக கூட்டணி 210 தொகுதிகளுக்குமேல் வெற்றிபெறும்: மு.தம்பிதுரை

தொண்டி அருகே உயிரிழந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை

தமிழகத்தில் ‘கிழக்கு கடற்கரை ரயில்வே‘ அமைக்க வேண்டும் மத்திய அமைச்சரிடம் எம்பி சுதா மனு

தமிழ்நாட்டின் மருத்துவத் துறையில் ஒரு காலிப் பணியிடம்கூட இல்லை
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

