தமிழக சட்டப்பேரவை வரும் அக்டோபர் 17 ஆம் தேதி 10 மணி அளவில் கூடுகிறது என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழக சட்டப்பேரவை அக்டோபர் 17-ல் 10 மணி அளவில் கூடுகிறது. சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாள் நடத்தலாம் என்பது குறித்து அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். துணை நிதிநிலை அறிக்கை இக்கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.
அதிமுக விவகாரத்தில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக கொறடா அளித்த கடிதம் தொடர்பாக உரிய நேரத்தில் முடிவு செய்யப்படும்.
பன்னீர் செல்வம், பழனிசாமி அளித்த கடிதங்கள் தொடர்பாக இரு தரப்பிடம் விளக்கம் கேட்பது ஆய்வில் உள்ளது. இருக்கைகள் தொடர்பாக சட்டப்பேரவை கூடும்போது தெரியவரும். பன்னீர் செல்வம், பழனிசாமி இருவரும் முதல்வராக இருந்தவர்கள்; கண்ணியமாக நடந்து கொள்வார்கள்.
இதையும் படிக்க: மகளிர் ஆசியக் கோப்பை: பாகிஸ்தானிடம் இந்தியா அதிர்ச்சித் தோல்வி!
இருக்கைகள் ஒதுக்குவது தொடர்பாக சட்டமன்ற மரபுப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்தியா - சீனா எல்லை வர்த்தகத்திற்காக நாது லா கணவாய் இன்று திறப்பு!

உடல்நிலையுடன் போராட்டம் முதல் தங்கப் பதக்கம் வரை... ஜாஸ்மினின் வெற்றி ரகசியம்!

குல்காம் பயங்கரவாத தாக்குதல்: காங்கிரஸ் கண்டனம்

மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கர்களை வெளியேற வலியுறுத்தும் அமெரிக்கா!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



