12.30 மணி நேர இடைநில்லா நடன உலக சாதனை முயற்சி!

12.30 மணி நேர இடைநில்லா நடன உலக சாதனை முயற்சி!

ராணிப்பேட்டையில் 12.30 மணி நேர இடைநில்லா நடன உலக சாதனை முயற்சி இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Published on

ராணிப்பேட்டையில் 12.30 மணி நேர இடைநில்லா நடன உலக சாதனை முயற்சி இன்று (சனிக்கிழமை) காலை 6 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ராணிப்பேட்டை ஸ்ரீ பிட்னஸ் டான்ஸ் ஸ்டுடியோ சார்பில் ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் உலக சாதனை முயற்சியாக 12.30 மணி நேர இடைநில்லா நடன சாதனை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, ஸ்ரீ பிட்னஸ் ஸ்டுடியோ நிறுவனர் வனிதா துரை தலைமையில், ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் எஸ். வெங்கடேசன், தலைவர் சி. கலைவாணி முன்னிலையில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனம் ஆடி வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து, மாலை 5.30 மணி அளவில் சாதனை முயற்சிக்கான சான்றிதழ் வழங்கி, நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com