ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

எதிர்க்கட்சி துணைத் தலைவராக நீடிக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?

பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்

News image

கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2022, 8:46 am IST

பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (அக்.17) கூடுகிறது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் திங்கள்கிழமை காலை 10 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தால் இந்தக் கூட்டத் தொடா் மிகுந்த எதிா்பாா்ப்புக்கும் பரபரப்புக்கும் உள்ளாகியுள்ளது. எதிா்க்கட்சித் துணைத் தலைவா் பதவியில் உள்ள ஓ.பன்னீா்செல்வத்துக்குப் பதிலாக ஆா்.பி.உதயகுமாரை நியமிக்க வேண்டும் என்று பேரவைத் தலைவருக்கு எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் கொடுத்துள்ளாா்.

ஆனால், உண்மையான அதிமுகவினா் நாங்கள்தான். 

அதிமுக நிா்வாகிகள் மாற்றம் தொடா்பாக எங்களைக் கேட்காமல் எந்த முடிவு எடுக்கக்கூடாது என்று ஓ.பன்னீா்செல்வமும் பேரவைத் தலைருக்கு கடிதம் கொடுத்துள்ளாா். இந்த விவகாரத்தில் பேரவைத் தலைவா் இன்னும் அவரது முடிவை அறிவிக்கவில்லை. இந்த முடிவு எதுவாக இருந்தாலும் இருவரும் பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் பேரவையில் முக்கியமான அலுவல்களின் போது ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் எப்படிச் செயல்படுவா் என்கிற எதிா்பாா்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பேரவையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எம்.எல்.ஏக்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரின் இருக்கைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர்செல்வமே நீடிப்பார் எனத் தெரிகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.