காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தீபாவளி: சென்னையில் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை! - முழு விவரம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் அக். 20 முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Published On :

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இன்று(அக். 20) முதல் மூன்று நாள்களுக்கு நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளியை முன்னிட்டு நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் இன்று(அக். 20) முதல் 22 வரை மூன்று நாள்களுக்கு இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் மேற்குறிப்பிட்ட மூன்று நாள்கள் மட்டும் 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில்  இயக்கப்படும். 

எனவே, மேற்குறிப்பிட்ட 3 நாள்களில் பயணிகள் மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

கூடுதல் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் நீட்டிப்பு சேவைகள் இந்த மூன்று நாள்களுக்கு மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.