அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திமுக முப்பெரும் விழா: டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது 

திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் விவரத்தை கட்சித் தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது 

News image
டி.ஆர். பாலு
Updated On :2 செப்டம்பர் 2022, 10:19 am

DIN

திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோரின் விவரத்தை கட்சித் தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது 

பெரியார், அண்ணா பிறந்த நாள், திமுகவின் தொடக்க நாள், இந்த மூன்று நாள்களையும் இணைத்து ஆண்டுதோறும் செப்டம்பர் 15-ஆம் தேதி திமுகவின் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு முப்பெரும் விழா வரும் 15ஆம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது. 

முப்பெரும் விழாவில் விருதுகள் பெறும் விருதாளர்களின் பெயர்களை திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, பெரியார் விருது சம்பூர்ணம் சாமிநாதனுக்கும், அண்ணா விருது கோவை இரா.மோகனுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கலைஞர் விருது திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கும், பாவேந்தர் விருது புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசுக்கும், பேராசிரியர் விருது குன்னூர் சீனிவாசனுக்கும் வழங்கப்படவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.