கோவையில் முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்தி வரும் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 7 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெரு விளக்குகளை மாற்றும் ஒப்பந்தத்தில், எல்.இ.டி. விளக்கு கொள்முதலில் ரூ.500 கோடி ஊழல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின்படி முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட 10 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு குழு இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
பல்வேறு ஊழல் வழக்கு மற்றும் ஒப்பந்தங்களில் முறைகேடு என ஏற்கெனவே இரண்டுமுறை வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் இன்று மூன்றாவது முறையாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 100-க்கும் மேற்பட்ட கட்சித் தொண்டர்கள் வேலுமணி வீட்டிற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதையும் படிக்க | எஸ்.பி. வேலுமணி வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை
இதையடுத்து, அதிமுகவின் 7 எம்.எல்.ஏ.க்கள் உள்பட நூற்றுக்கணக்கான தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் உரிமைத் தொகை ரூ. 1000 வருமா? வராதா?

விஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்?

தமிழ்நாட்டில் 6 நாள்களுக்கு கனமழை தொடரும்!
தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

