அவரவர் விரும்பிய மத வழிபாடு செய்துகொள்ள அவரவருக்கு உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது என்று உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.
பெரியார் பிறந்தநாளன்று ஸ்ரீரங்கத்தில் மனுதர்ம தேவ இதிகாசத்தை எரித்து போராட்டம் நடத்த தடை கோரிய வழக்கில் உயர் நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
ஒரு மதத்தினரை, வழிபாட்டு முறைகளை, மத நம்பிக்கைகளை அவமதிக்கும் விதமாக போராட்டம் நடத்த அனுமதியில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போராட்டங்கள் நடத்த அரசு தரப்பில் எந்த அனுமதியும் அளிக்கவில்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கோயில் வழிபாடு மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்கள் அதிகாரம் கட்சியினரின் போராட்ட அறிவிப்பை எதிர்த்து ரங்கராஜ் நரசிம்மன் என்பவர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முதல்முறை அரேபிய படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மான்!
இன்றைய செய்திகள் ஜூன் 19 - நேரலை!

போராட்டத்தை இணைந்து முன்னெடுப்போம்- மு.க. ஸ்டாலின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த ராகுல்!

என்னுடைய அப்பாவை நினைத்து பெருமைப்படுகிறேன்! - ஹபீபி படத்தைப் பாராட்டிய தனுஷ்!
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



