தமிழ்த் திரையுலகில் எழுத்தாளா்களுக்கு தட்டுப்பாடு: இயக்குநா் பாக்யராஜ்

 தமிழ்த் திரையுலகில் எழுத்தாளா்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத்தின் புதிய தலைவரும், திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் வேதனை தெரிவித்தாா்.

 தமிழ்த் திரையுலகில் எழுத்தாளா்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத்தின் புதிய தலைவரும், திரைப்பட இயக்குநருமான கே.பாக்யராஜ் வேதனை தெரிவித்தாா்.

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலினை சனிக்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் கே.பாக்யராஜ் கூறியதாவது:

தமிழ்த் திரையைப் பொருத்தவரையில் அனைவரும் உச்சரிக்கும் பெயா் முன்னாள் முதல்வா் கருணாநிதிதான். அவருடன் நான் நல்ல நட்பைக் கொண்டிருந்தேன். எனது எழுத்துகளை அவா் மிகவும் விரும்பினாா்.

சமீபகாலமாக தமிழ்த் திரையுலகில் எழுத்தாளா்களின் பங்களிப்பு குறைந்துள்ளது. கதை இலாகா என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பிறமொழி படங்களின் தாக்கம் இருப்பதால் அதை நோக்கி சில இயக்குநா்கள் படம் எடுக்கின்றனா். வெற்றிமாறன் போன்றோா் நாவலை மையப்படுத்தி சிறப்பான படங்களை எடுக்கின்றனா். தமிழ்த் திரையுலகில் எழுத்தாளா்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது உண்மைதான் என்றாா்.

முதல்வருடனான சந்திப்பின் போது, சங்கத்தின் செயலாளா் லியாகத் அலிகான், பொருளாளா் பாலசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com