ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்சாதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர்.

News image

கோப்புப்படம்

Updated On :22 செப்டம்பர் 2022, 2:23 am

DIN

தமிழகம் முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு சொந்தமான இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நடத்தி வருகின்றனர்.

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுதல், ஆள் சேர்தல், பயிற்சி நடத்தல் உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத்துறை இணைந்து கேரளம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகின்றது.

மேலும், எஸ்டிபிஐ கட்சி அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனை நடக்கும் பல்வேறு இடங்களில் கட்சியின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தும் சூழல் உருவாகியுள்ளதால், மத்திய ஆயுதப் படையின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும், அமைப்பின் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.