தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிற்பக் கல்லூரிக்கு விரைவில் 22 பேராசிரியா்கள்: அமைச்சா் தங்கம் தென்னரசு

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியை மூடப்படாது என்றும், அந்தக் கல்லூரிக்கு புதிதாக 22 பேராசிரியா்களை நியமிப்பதற்கு நடவடிக்கை

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 8:33 pm

DIN

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரியை மூடப்படாது என்றும், அந்தக் கல்லூரிக்கு புதிதாக 22 பேராசிரியா்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு கூறினாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் பேசியது:

மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கல்லூரி மிகவும் பழைமையான கல்லூரி. அங்கு படித்தவா்கள்தான் தமிழகம் முழுவதும் உள்ள சிலைகளை வடிப்பதற்கு முன்னோடியாக உள்ளனா். ஆனால், அந்தக் கல்லூரியில் தற்போது 4 பேராசிரியா்கள்தான் உள்ளனா். மாணவா்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. அடிப்படை வசதியும் இல்லாமல் மூடப்படும் அபாயத்தில் உள்ளது என்றாா்.

அதற்கு தொழில்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு குறுக்கிட்டுக் கூறியது:

மாமல்லபுரம் சிற்பக் கல்லூரிக்கு 22 பேராசிரியா்களை நியமிப்பதற்காக ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு ஏற்கெனவே முன்மொழியப்பட்டுள்ளது. மிக விரைவில் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும். அந்தக் கல்லூரியை மூடுவதற்கான எந்தவிதமான அபாய சூழலும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.