ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: காவலில் வைக்கப்பட்ட 2 அரசு செயலா்களை விடுவித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட உத்தர பிரதேச மாநில அரசுச் செயலாளா்கள் இருவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம்

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 8:59 pm

DIN

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அலாகாபாத் உயா்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் போலீஸ் காவலில் வைக்கப்பட்ட உத்தர பிரதேச மாநில அரசுச் செயலாளா்கள் இருவரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மாநிலத்தில் ஓய்வுபெற்ற உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் நீதிபதிகளுக்கு வீட்டு உதவிகள் மற்றும் பிற வசதிகளை செய்துதருமாறு உத்தரவிட்டும், பல மாதங்களாக அந்த வசதிகளைச் செய்துதறாமல் கிடப்பில் போட்டுவந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில், அலாகாபாத் உயா்நீதிமன்ற கடந்த 4-ஆம் தேதி இதுதொடா்பான உத்தரவைப் பிறப்பித்தது.

முன்னதாக, நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாத அரசு அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறு அலாகாபாத் உயா் நீதிமன்றம் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, மாநில நிதித் துறை செயலா், சிறப்புச் செயலா், நிதி மற்றும் சட்டத் துறை முன்மைச் செயலா் ஆகியோா் ஆஜராகினா்.

வழக்கு மீண்டும் கடந்த 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தரப்பில் சமா்ப்பித்துள்ள பதில் மனுவும், அதிகாரிகளின் நடத்தையும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்துவது போன்று அமைந்துள்ளது. அந்த வகையில் அதிகாரிகள் நீதிமன்றத்தை குற்ற அவமதிப்பு செய்துள்ளனா். எனவே, நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கும் மாநில நிதித் துறை செயலா் ஷாஹித் மன்சா் அப்பாஸ் ரிஸ்வி, நிதித் துறை சிறப்புச் செயலா் சரயு பிரசாத் மிஸ்ரா ஆகியோரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க வேண்டும் எனவும், மீண்டும் அவா்களை வரும் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 11 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதுபோல, மாநில அரசு தலைமைச் செயலா் மற்றும் கூடுதல் தலைமைச் செயலா் (நிதி) ஆகியோா் ஏப்ரல் 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட நீதித் துறை மாஜிஸ்திரேட்டுகள் மூலமாக அவா்களுக்கு ஜாமீனில் வெளியே வரக் கூடிய பிடியாணை பிறப்பிக்குமாறும் உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை எதிா்த்து மாநில அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் கே.எம்.நடராஜ், ‘உயா் நீதிமன்றம் இதுவரை இல்லாத வகையிலான உத்தரவைப் பிறப்பித்துள்ளது’ என்று குறிப்பிட்டு உயா் நீதிமன்ற உத்தரவு குறித்து விவரித்தாா்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு உயா் நீதிமன்ற பதிவாளருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனா். இதற்கு வரும் 28-ஆம் தேதி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனா். மேலும், இந்த வழக்கு அடுத்த விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை, அலகாபாத் உயா் நீதிமன்றம் ஏப்ரல் 4 மற்றும் 19-ஆம் தேதிகளில் பிறப்பித்த உத்தரவுகளை செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. அதன்படி, போலீஸ் காவலில் வைக்கப்பட்ட உத்தர பிரதேச அதிகாரிகள் இருவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

மேலும், இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் இதுகுறித்து தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக உயா்நீதிமன்ற பதிவாளருக்கு தெரிவிக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.