பாஜகவுடனான கூட்டணி குறித்து இபிஎஸ் விளக்கம்
பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.


பாஜகவுடனான கூட்டணி குறித்து அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாவது:
தமிழகத்தில் பாஜக உடனான கூட்டணி தொடர்கிறது. கர்நாடகத்தில் எங்கள் கட்சியின் அடையாளத்தைக் காட்ட ஒரு தொகுதியில் தனித்து நிற்கிறோம்.
திமுகவை எதிர்க்க திராணி உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே. திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் இலட்சியம். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தால் அதிமுக இனி பிரதான எதிர்க்கட்சியாக செயல்படும்.
என்னை ஒற்றைத் தலைமை என சொல்ல வேண்டாம், நான் ஒரு சாதரண தொண்டன். எங்களுக்கு தேவை ஒரு பொதுச் செயலாளர். கட்சியில் ஒரு சிலரைத் தவிர கட்சியை நேசிப்பவர்கள் யார் வந்தாலும் இணைத்துக் கொள்வோம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...