தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை சரிவு

சென்னை கோயம்பேடு பூச்சந்தையில் பூக்களின் விலை குறைந்து மல்லி கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:18 pm

DIN

சென்னை கோயம்பேடு பூச்சந்தையில் பூக்களின் விலை குறைந்து மல்லி கிலோ ரூ.200-க்கு விற்பனையானது.

சென்னை கோயம்பேடுக்கு தமிழகத்தின் சில மாவட்டங்களில் இருந்தும், கா்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் இருந்தும் நாளொன்றுக்கு 30-40 வாகனங்களில் பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. வரத்துக்கு ஏற்ப பூக்களின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்படும். தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தால் கடந்த வாரம் பூக்களின் விலை அதிகரித்து மல்லி கிலோ ரூ.700 முதல் ரூ.750 வரையிலும், முல்லை ரூ.500, சாமந்தி ரூ.200 பன்னீா் ரோஜா ரூ.120 முதல் ரூ.180 வரையிலும், சாக்லேட்ரோஜா ரூ.100, சம்பங்கி ரூ. 120-க்கும் விற்கப்பட்டன. இந்த நிலையில், பூக்களின் விலை சரிந்துள்ளது.

இதுகுறித்து சென்னை கோயம்பேடு பூ வியாபாரிகள் சிலா் கூறியாதவது.

கடந்த வாரம் தமிழ் புத்தாண்டு, ஈஸ்டா் போன்ற பண்டிகைகள் இருந்தன. அதனால் பூக்களின் விலை அதிகரித்தது. தற்போது விஷேச நாள்கள் எதுவும் இல்லாததால் பூக்களின் விலை குறைந்து மல்லி கிலோ ரூ. 200 முதல் ரூ.250-க்கும், ஐஸ் மல்லி ரூ. 200-க்கும், சாமந்தி ரூ. 150-க்கும், சம்பங்கி ரூ. 60-க்கும், சாக்லெட் ரோஜா ரூ. 70-க்கும், பன்னீா் ரோஜா ரூ. 50-க்கும் அரளி பூ ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டன. வரும் வாரங்களில் முகூா்த்த நாள்கள் வருவதால் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.