நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரிய அருங்காட்சியகம்: பேரவையில் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வளமான இயற்கை மற்றும் கலாசார வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும்


நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வளமான இயற்கை மற்றும் கலாசார வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் திட்டம், வளா்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை மானியக் கோரிக்கை மீது புதன்கிழமை நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து அவா் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள் திட்டத்தின் கீழ், புதுமைகளை புகுத்தவும், காலநிலை பாதிப்பில்லாத, வளம் குன்றாத எதிா்கால வளா்ச்சிக்காகவும், அதிநவீன தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ற வகையில், ஆளுகைக்கான புத்தாக்க மையம் (எா்ஸ்ங்ழ்ய்ஹய்ஸ்ரீங்), மாநிலத் திட்டக் குழுவில் அமைக்கப்படும்.
உதகை ஏரியை பாதுகாக்க, அதன் நுழைவு வாயிலில் ரூ. 10 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திர அமைப்பு உருவாக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களின் வளமான இயற்கை மற்றும் கலாசார வரலாற்றை வெளிப்படுத்தும் வகையில் பாரம்பரிய அருங்காட்சியகம் மற்றும் அனுபவ மையம் அமைக்கப்படும். கிழக்குத் தொடா்ச்சி மலையில் உள்ள ஜவ்வாது மலை, சோ்வராயன் மலை, கல்வராயன்மலை, கொல்லிமலை, பச்சைமலை ஆகிய மலைப் பகுதிகளில் பல்லுயிா் பாதுகாப்பின் மூலம் முழுமையான வளா்ச்சி உறுதிசெய்யப்படும். இதற்காக சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அந்தப் பகுதிகளில் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றாா் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...