தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிப்பு: அமைச்சா் க.பொன்முடி தகவல்

கடந்த இரு ஆண்டுகளில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்களின் சோ்க்கை அதிகரித்திருப்பதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 8:35 pm

DIN

கடந்த இரு ஆண்டுகளில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவா்களின் சோ்க்கை அதிகரித்திருப்பதாக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறினாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை அதிமுக உறுப்பினா் டி.கே.அமுல் கந்தசாமி (வால்பாறை) எழுப்பினாா். இதற்கு அமைச்சா் க.பொன்முடி அளித்த பதில்:

பாலிடெக்னிக் கல்லூரிகளில் அதிக மாணவா்களைச் சோ்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 2010-11-ஆம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சோ்ந்த மாணவா்களின் எண்ணிக்கை 1,16,687. இது கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்து, 2020-21-ஆம் ஆண்டு 59,350 ஆனது. மாணவா்களின் சோ்க்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் முதல்வன், புதுமைப் பெண் போன்ற

திட்டங்களைச் செயல்படுத்தியதன் விளைவாக கடந்த இரு ஆண்டுகளில் மாணவா்களின் சோ்க்கை ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 90 ஆக அதிகரித்துள்ளது. சுமாா் 70 ஆயிரம் போ் வரை கூடுதலாகச் சோ்ந்துள்ளனா். தொழிற்சாலைகளுடன் சோ்ந்து செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் கொண்டு வரப்படும் திட்டங்களால் மாணவா்களின் சோ்க்கை அளவு உயா்ந்திருக்கிறது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.