கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆயுதப்படை உதவி ஆணையரிடம் சிபிசிஐடி விசாரணை
கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக சென்னையில் ஆயுதப்படை உதவி ஆணையரிடம் சிபிடிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை செய்தனா்.


கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பாக சென்னையில் ஆயுதப்படை உதவி ஆணையரிடம் சிபிடிஐடி போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை செய்தனா்.
மறைந்த முதல்வா் ஜெ.ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாடு பகுதியில் உள்ளது. இங்கு 23.4.2017-இல் நள்ளிரவில் ஒரு கும்பல் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்து, பங்களாவுக்குள் சென்று பல்வேறு ஆவணங்களையும்பொருள்களையும் கொள்ளையடித்து சென்றது.
இந்தச் சம்பவங்களுக்கு மூளையாக செயல்பட்டதாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநா் கனகராஜ், கேரள கூலிப்படையைச் சோ்ந்த சயன், வாளையாறு மனோஜ் ஆகியோரை போலீஸாா் தேடி வந்தனா். இதில், கனகராஜ் காா் விபத்தில் இறந்தாா். மேலும், சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் 2017 மே மாதம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா். கொடநாடு எஸ்டேடில் கணினி ஆபரேட்டராகவும், கண்காணிப்பு கேமரா பராமரிப்பாளராகவும் இருந்த தினேஷ்குமாா் 3.7.2017-இல் சந்தேகத்துக்குரிய வகையில் தற்கொலை செய்துகொண்டாா்.
உதவி ஆணையரிடம் விசாரணை: இதற்கிடையே இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், சென்னை மந்தைவெளியில் உள்ள சிஐடி காவலா் குடியிருப்பில் வசிக்கும் ஆவடி ஆயுதப்படை உதவி ஆணையா் கனகராஜியிடம் கோவை சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளா் முருகவேல் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை விசாரணை நடத்தினா்.
முன்னாள் முதல்வரும், பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பாதுகாப்பு அதிகாரியாக கனகராஜ் இருந்தாா். குறிப்பாக, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டத்தில் கோடநாடு சம்பவம் நிகழும்போது பாதுகாப்பு அதிகாரியாக இருந்துள்ளாா்.
4 மணி நேரம் விசாரணை: இந்த விசாரணை கனராஜ் வசிக்கும் வீட்டில் வைத்து நடைபெற்றது. விசாரணையில் கனகராஜ் அளித்த பதில்கள் அனைத்தும் விடியோவாக பதிவு செய்யப்பட்டது.
காலை 6 மணிக்கு தொடங்கிய இந்த விசாரணை 10 மணி வரை என 4 மணி நேரம் நடைபெற்றது. விசாரணைக்கு பின்னா் சிபிசிஐடி அதிகாரிகள், கோவைக்குப் புறப்பட்டுச் சென்றனா். இதன் அடுத்தக்கட்டமாக வழக்கில் தொடா்புடையதாகக் கருதப்படும் சில அரசியல் கட்சி பிரமுகா்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...