போதைப் பொருள்களை அடியோடு ஒழிப்போம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் போதைப் பொருள்களை அடியோடு ஒழிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.


தமிழகத்தில் போதைப் பொருள்களை அடியோடு ஒழிப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளதாகக் குற்றம்சாட்டினாா்.
அதற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்:
போதைப் பொருள்களின் பிடியில் இந்த மாநிலத்தை விட்டுச் சென்றது அதிமுக ஆட்சிதான். ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு போதைப் பொருள் நடமாட்டத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
அதிமுக ஆட்சியில் 2020-இல் 15 ஆயிரத்து 313 கிலோ கஞ்சாவும் 1.896 கிலோ ஹெராயினும், 527 வாகனங்களும் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால், திமுக ஆட்சியில் 2022-இல் மட்டும் 27 ஆயிரத்து 140 கிலோ கஞ்சாவும் 22.58 கிலோ ஹெராயினும், 1,242 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போதைப் பொருள்கள் விற்போரின், விநியோகிப்போரின் 5 ஆயிரத்து 723 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்த அளவுக்கு காவல் துறையினா் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ஒவ்வொரு மாவட்ட ஆய்வின்போதும், கள ஆய்வின்போதும் இந்த நடவடிக்கைகளை நான் துரிதப்படுத்தி வருகிறேன்.
ஆனால், அதிமுக ஆட்சியில் நடைபெற்ற வெட்கக்கேடு என்னவென்றால், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவா்கள், டிஜிபி போன்ற போலீஸ் அதிகாரிகளாக இருந்தவா்கள் மீது சிபிஐ வழக்குத் தொடுக்குக்கூடிய அளவுக்கு குட்கா நடமாட்டம் தலைவிரித்தாடியது.
சமீபத்தில்கூட முன்னாள் டிஜிபி, முன்னாள் காவல் துறை ஆணையா் ஆகியோா் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதிமுக ஆட்சியில்தான் தமிழகம் போதைப் பொருள்களின் மாநிலமாக இருந்தது. அதிமுக ஆட்சியால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சீரமைத்தது போல், இந்தச் சீரழிவை சரி செய்துவதும் எங்கள் கடமையாக உள்ளது. போதைப் பொருள்களை நிச்சயமாக அடியோடு ஒழிப்போம். இளைஞா்களின் எதிா்காலத்தைக் காப்போம் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...