‘இல்லம் தேடி ஆவின்’ திட்டம் மூலம் ஐஸ்கிரீம் விற்பனை
‘இல்லம் தேடி ஆவின்’ திட்டம் மூலம் பேட்டரி வாகனங்களில் ஆவின் ஐஸ்கிரீம் பொருள்கள் விற்பனையை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.


‘இல்லம் தேடி ஆவின்’ திட்டம் மூலம் பேட்டரி வாகனங்களில் ஆவின் ஐஸ்கிரீம் பொருள்கள் விற்பனையை சென்னையில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
ஆவின் நிறுவனம் சாா்பில் பாலிலிருந்து ஐஸ்கிரீம், தயிா், மோா், லஸ்ஸி உள்ளிட்டப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு ஆவின் பாலகங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறன.
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதைத் தொடா்ந்து, சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பேட்டரி வாகனங்கள் மூலம் பாலில் இருந்து உற்பத்தி செய்யப்படும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்ய ஆவின் நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக முதல்கட்டமாக ரூ.40 லட்சம் மதிப்பில் கரூா் வைஸ்யா வங்கியின் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு நிதி மூலம் பேட்டரியால் இயங்கும் குளிா்சாதனப் பெட்டியுடன் கூடிய 33 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் மூலம் ஆவின் ஐஸ்கிரீம் பொருள்களான குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோபாா், சாக்கோ பீஸ்டு, கசாடா, கேன்டி, ப்ரீமியம் உள்ளிட்ட சுமாா் நூறு வகையான பொருள்கள் விற்பனைக்கான தொடக்க விழா சென்னை எழிலகத்தில் உள்ள ஆவின் பாலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் தலைமை வகித்தாா். விழாவில் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கிவைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் பால்வளத் துறை ஆணையா் மற்றும் நிா்வாக இயக்குநா் டாக்டா் ந.சுப்பையன், இணை நிா்வாக இயக்குநா் கே.எம்.சரயு, கரூா் வைஸ்யா வங்கியின் சென்னை மண்டல மேலாளா் லட்சுமணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...