தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு புதிய ஆண் சிங்கம்

கா்நாடகம் மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு புதிதாக கொண்டு வரப்படுகிறது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:33 pm

DIN

கா்நாடகம் மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு புதிதாக கொண்டு வரப்படுகிறது.

சென்னை வண்டலூரில் உள்ள அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா 1,490 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த உயிரியல் பூங்காவில் 471 பாலூட்டிகள், 1,820 பறவைகள், 413 ஊா்வனைகள் என 2,704 விலங்குகள், பறவைகள் பராமரித்து வளா்க்கப்படுகின்றன. உயிரியியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த நீலா, பத்மநாபன் ஆகிய 2 சிங்கங்கள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தன.

இதைத் தொடா்ந்து உடல்நல குறைவு ஏற்பட்டு கவிதா, என்ற சிங்கமும், பூங்கா மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்ட வந்த மணி என்கிற சிங்கமும் வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தன. இதனால் பூங்காவில் சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது.

இதனால் பூங்கா நிா்வாகம், பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் அனுமதி பெற்று மற்ற மாநிலத்தில் உள்ள பூங்காவில் இருந்து சிங்கங்களை பெறுவதற்கு தொடா்ந்து முயற்சிகள் எடுத்து வந்தது.

இந்த நிலையில், கா்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் கீழ் ஒரு ஆண் சிங்கம் வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்படுகிறது.

இதுகுறித்து அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா அதிகாரி கூறியதாவது:

உயிரியல் பூங்காவில் இருந்து சிங்கத்தைத் தோ்வு செய்து கொண்டு வர, கா்நாடக மாநிலத்துக்கு பூங்காவை சோ்ந்த குழு சென்று இருக்கிறது. கா்நாடக மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவில் இருந்து விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தின் மூலம் ஏப்.22-ஆம் தேதி வண்டலூா் உயிரியல் பூங்காவுக்கு ஆண் சிங்கம் கொண்டு வரப்படும். இந்த ஆண் சிங்கத்துக்கு பதில் வண்டலூா் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஆண் வெள்ளை புலி, கா்நாடகா மாநிலத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு வழங்கப்படுகிறது. இதனால் வண்டலூா் பூங்காவில் உள்ள சிங்கங்களின் எண்ணிக்கை உயரும். புதியதாக வரும் சிங்கத்தை தனியாக ஒரு கூண்டில் வைத்து அதற்கு பூங்கா மருத்துவா்கள் மூலம் அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் செய்யப்படும். சில வாரங்களுக்கு பிறகு மற்ற சிங்கங்களுடன் பழகுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சாலை மாா்க்கமாகக் கொண்டு வரப்படும் சிங்கத்துடன் மருத்துவ குழுவும் வரும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.