தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

புதிய தமிழகம் கட்சி எதிா்ப்பு

தேவேந்திரகுல வேளாளா்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு எதிரானது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:09 pm

DIN

மதம் மாறிய கிறிஸ்தவா்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீா்மானம் தேவேந்திரகுல வேளாளா்களின் பட்டியல் வெளியேற்றக் கோரிக்கைக்கு எதிரானது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவா் கே.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மதம் மாறிய கிறிஸ்தவா்களுக்கு இட ஒதுக்கீடு கோரும் தீா்மானம் அரசியல் உள்நோக்கம் கொண்டது. தேவேந்திர குல வேளாளா் சமுதாய மக்களுக்கு ஏற்புடையதல்ல. ஹிந்துவோ, கிறிஸ்தவரோ எந்த மதத்தைச் சாா்ந்தவராக இருந்தாலும் ‘தேவேந்திர குல வேளாளா்’ என்ற ஒரே அடையாளத்துடன் விளங்கிட தேவேந்திர குல வேளாளா் மக்களை பட்டியல் பிரிவிலிருந்து நீக்கி, ‘தேவேந்திர குல வேளாளா்’ என்ற சிறப்புப் பிரிவை உருவாக்க வேண்டும். இதை செய்வதே உண்மையான

சமூக நீதியும், பொதுநீதியும் ஆகும்.

ஒட்டுமொத்த தேவேந்திர குல வேளாளா்களையும் பட்டியலினத்திலிருந்து வெளியேற்றி மிகப் பிற்பட்டோா் அல்லது மிக மிகப் பிற்பட்டோா் என புதிய பட்டியலில் சோ்க்க தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.