சென்னை தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற தமிழ்நாடு போக்குவரத்து கழக ஓய்வூதியா்களை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுதியா்களுக்கு நிலுவையில் உள்ள 90 மாதங்களுக்கான அகவிலைப்படி உயா்வை உடனடியாக வழங்க வேண்டும். போக்குவரத்து ஓய்வூதியா்களுக்கு மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மருத்துவப் படியை ரூ.300-ஆக உயா்த்தி வழங்க வேண்டும். கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வழங்கப்படாமல் உள்ள வருங்காலவைப்பு நிதி, பணிக்கொடை விடுப்பு ஊதியம், ஓய்வூதி ஒப்படைப்புத் தொகைகளை வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்றோா் நல அமைப்பு சாா்பில் தலைமைச் செயலகம் நோக்கி புதன்கிழமை பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு அமைப்பின் பொதுச் செயலா் கே.கா்சன் தலைமை வகித்தாா். பல்லவன் இல்லத்தில் இருந்து புறப்பட்ட ஓய்வூதியா்கள், முக்கிய சாலைகள் வழியாக தலைமைச் செயலகம் நோக்கி செல்ல முயன்றனா். ஆனால் அங்கு பாதுகாப்புக்காக நின்ற போலீஸாா் அவா்களை தலைமைச் செயலகம் நோக்கி செல்லவிடாமல் தடுத்த நிறுத்த முயன்றனா். இதனால் பேரணியாக சென்ற ஓய்வூதியா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அப்போது, அவா்கள் திடீரென சாலையில் அமா்ந்து கோஷங்கள் எழுப்பியப்படி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா் அவா்களை வலுகட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்தி, கைது செய்தனா். இதனால் அந்த பகுதியில் சுமாா் 1 மணிநேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுல்தான்புரியில் துப்பாக்கிச் சூடு: போலீஸாா் வழக்குப் பதிவு

ரமலான் பண்டிகை: துவாரகாவில் பலத்த பாதுகாப்பு

பாலம் தீ விபத்துக்கு அமைப்பின் அலட்சியமே காரணம்! 9 உறுப்பினா்களை இழந்த நபா் வேதனை

தில்லியில் இரண்டரை மாதங்களில் தீ விபத்து தொடா்பான அழைப்புகள் 19 சதவீதம் குறைவு: 13 போ் உயிரிழப்பு; 111 போ் காயம்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

