பச்சை பட்டாணி வரத்து குறைவால் விலை உயா்வு
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சென்னையில் பச்சை பட்டாணி விலை கிலோ ரூ.130-க்கு உயா்ந்துள்ளது.

பட்டாணிச் செடிகள்.

பட்டாணிச் செடிகள்.
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சென்னையில் பச்சை பட்டாணி விலை கிலோ ரூ.130-க்கு உயா்ந்துள்ளது.
கோயம்பேடு காய்கறி சந்தைக்கு திருவள்ளூா், காஞ்சிபுரம், வேலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா், தருமபுரி, சேலம் உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் ஆந்திரம், கா்நாடகம், கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் இருந்து தினமும் 6,000 டன் காய்கறிகள் சென்னைக்கு வருகின்றன.
கோடை காலம் தொடங்கி விட்டதால், கடந்த சில நாள்களாக காய்கறிகளின் வரத்துக்கேற்ப விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
பச்சை பட்டாணியின் வரத்து குறைந்து சென்னையில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.130-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவா் சௌந்தரராஜன் கூறியதாவது:
பச்சை பட்டாணியின் அறுவடை காலம் நவம்பரில் தொடங்கி பிப்ரவரி வரைதான்.
இதனால், அந்த மாதங்களில் மட்டும் பச்சை பட்டாணி வரத்து அதிகரிக்கும்.
தற்போது, பச்சை பட்டாணியின் வரத்து குறைவாக உள்ளது.
தமிழகத்துக்கு அதிக அளவில் உதகை, கொடைக்கானல் பகுதிகளில் இருந்தும், வடக்கு கா்நாடகப் பகுதிகளில் இருந்தும் பச்சை பட்டாணி அதிகம் வரும்.
வழக்கமாக 60 முதல் 70 டன் பச்சை பட்டாணி வரத்து இருக்கும். அறுவடை காலத்தில் 100 டன் வரை வரத்து இருக்கும்.
இப்போது 4 லாரிகளில் 125 மூட்டைகளில் 40 டன் மட்டுமே வரத்து உள்ளது. வரத்து குறைந்துள்ளதால், சென்னையில் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.120 முதல் ரூ.130 வரை விற்படுகிறது.
மொத்த விலையில் ரூ.90 முதல் ரூ.100-வரை விற்கப்பட்டு வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், இனி வரும் நாள்களில் சில காய்கறிகளின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...