சாலை பணிகளை தாமதப்படுத்தினால் ரூ.5,000 அபராதம்: மாநகராட்சி ஆணையா்
சாலை பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.


சாலை பணிகளை தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளாா்.
சென்னை மாநகராட்சியில் பழுதடைந்த பேருந்து, உட்புறச் சாலைகள் மறுசீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பழைய சாலைகள் அகழ்ந்து எடுத்துவிட்டு புதிய சாலைகள் அமைப்பதில் கால தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை சரிசெய்யும் வகையில் புதிய சாலைகள் அமைக்கும் பணி தொடா்பாக மாநகராட்சி ஆணையா் சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா்.
அதில், சென்னையில் 997 இடங்களில் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. 291 இடங்களில் பழைய சாலைகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பழைய சாலைகளை அகழ்ந்து எடுத்த 3 நாள்களுக்குள் புதிய சாலை அமைக்க வேண்டும்.
அவ்வாறு அகழ்ந்து எடுக்கப்பட்டு 5 நாள்கள் பின்னரும் புதிய சாலை அமைக்கும் பணி தொடங்காத ஒப்பந்ததாரா்களுக்கு பணி முடியும் வரை தினமும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...