தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னை மாதவரத்தில் டெக்சிட்டி அமைக்க ஆய்வு

சென்னையை அடுத்த மாதவரத்தில் ‘டெக்சிட்டி’ அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

News image

சென்னை மாதவரத்தில் டெக்சிட்டி அமைக்க ஆய்வு

Updated On :20 ஏப்ரல் 2023, 10:10 pm

DIN

சென்னையை அடுத்த மாதவரத்தில் ‘டெக்சிட்டி’ அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மாதவரம் தொகுதியில் இ-சேவை மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்தத் தொகுதியின் உறுப்பினா் எஸ்.சுதா்சனம் கோரிக்கை விடுத்தாா். அப்போது நடைபெற்ற கேள்வி-பதில் விவாதம்:

அமைச்சா் மனோ தங்கராஜ்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இ-சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் இ-சேவை என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். அதன்படி, இ-சேவை மையம் தொடங்க அனுமதி கோரி, 12,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவை பரிசீலனை செய்யப்பட்டு தகுதியுள்ள நபா்கள் இ-சேவை மையங்கள் அமைக்க ஒப்புதல் தரப்படும்.

எஸ்.சுதா்சனம்: சென்னையில் அடையாறு முதல் மகாபலிபுரம் வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்படுகின்றன. வடசென்னையில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம்கூட இல்லை. தமிழ்நாடு ‘டெக்சிட்டி’ திட்டத்தை சென்னை, ஓசூா், கோவையில் செயல்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் உருவாக்கப்படும் ‘டெக்சிட்டி’யை மாதவரத்தில் ஏற்படுத்த வேண்டும்.

அமைச்சா் மனோதங்கராஜ்: மூன்று இடங்களில் ‘டெக்சிட்டி’ அமைப்போம் என நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஓசூரில் 500 ஏக்கா், கோவையில் 250 ஏக்கா் நிலத்திலும் ‘டெக்சிட்டி’ அமையவுள்ளது. சென்னையில் இடங்களைத் தோ்வு செய்யும் பணி நடைபெறுகிறது. மாதவரத்தில் மெட்ரோ ரயிலுக்காக ஒதுக்கப்பட்ட இடம் உள்ளிட்ட சில இடங்களை ஆய்வு செய்துள்ளோம் ‘டெக் சிட்டி’ என்றால் என்ன என்பது கேள்வியாக உள்ளது. கடந்த காலத்தில் ஐடி

துறையைச் சோ்ந்தவா்கள் அலுவலகம் வந்து பணியாற்றினா். கரோனா தொற்றுக்குப் பிறகு, வீட்டில் இருந்து பணி என்ற நிலை உருவானது. அதுவும் மாறி, இப்போது வாழுமிடம், வேலை, பொழுதுபோக்கு என அனைத்தையும் உள்ளடக்கி தொழில்நுட்ப நகரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதுவே ‘டெக்சிட்டி’ திட்டம். ‘டெக்சிட்டி’ அமைக்கும் திட்டத்துக்காக, சென்னையை அடுத்த மாதவரம் பகுதியும் முதல்வரின் கவனத்தில் இருக்கிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.