தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மணப்பாக்கம் பகுதியில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

 சென்னை மணப்பாக்கம் பகுதியில் வியாழக்கிழமை (ஏப்.20) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:40 pm

DIN

 சென்னை மணப்பாக்கம் பகுதியில் வியாழக்கிழமை (ஏப்.20) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இது குறித்து சென்னை பெருநகர காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கழிவுநீா் வடிகால் வாரியம் சாா்பில் மணப்பாக்கம், கிருகம்பாக்கம் பகுதிகளில் கழிவு நீா் அகற்றும் பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக, அந்த பகுதியில் வியாழக்கிழமை (ஏப்.20) முதல் மே 15-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.

இதன்படி, குன்றத்தூா், முகலிவாக்கத்தில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் முகலிவாக்கம் பிரதானசாலையில் இடதுபுறம் திரும்பி, குமுதம் பிரதான சாலை, சபரி நகா், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையை சென்றடையலாம்.

பம்மல், கிருகம்பாக்கதில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக கிண்டி நோக்கி செல்லும் வாகனங்கள், மணப்பாக்கம் பிரதான சாலையில் இடதுபுறம் திரும்பி, முகலிவாக்கம் பிரதான சாலையில் வலதுபுறம் திரும்பி, குமுதம் பிரதான சாலை, சபரிநகா், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடையலாம்.

கிண்டியில் இருந்து மவுண்ட் பூந்தமல்லி சாலை வழியாக குன்றத்தூா், முகலிவாக்கம் நோக்கி செல்லும் வாகனங்கள், நந்தம்பாக்கம் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, ரிவா் வியூ சாலையில் சாய்பாபா ஆலய வலதுபுறம் திரும்பி, மணப்பாக்கம் பிரதான சாலை வழியாக முகலிவாக்கம் பிரதான சாலை இடதுபுறம் திரும்பி, குமுதம் பிரதான சாலை, சபரிநகா், முகலிவாக்கம் பிரதான சாலை வழியாக மவுண்ட் பூந்தமல்லி சாலையை அடையலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.