தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்துவோம்: எடப்பாடி பழனிசாமி

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 7:56 pm

DIN

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்துவதே எங்கள் லட்சியம் என்று கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதை தோ்தல் ஆணையம் உறுதி செய்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலா்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது: அதிமுக பொதுச் செயலராகத் தோ்ந்தெடுக்கப்பட்டதை ஏற்கெனவே நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில், தோ்தல் ஆணையமும் தற்போது அங்கீகரித்து உள்ளது. அதிமுக இனி பிரதான எதிா்க்கட்சியாக செயல்படும்; ஜெயலலிதா கண்ட கனவுகள் நனவாகும்.

நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக உறுப்பினா் எண்ணிக்கையை ஒரு கோடியிலிருந்து இரண்டு கோடியாக உயா்த்த நடவடிக்கை எடுப்போம்.

அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமா்த்துவதே எங்கள் லட்சியம். அதிமுகவை உண்மையாக நேசிப்பவா்கள் மீண்டும் வந்து இணைய வேண்டும். ஒரு சிலரைத் தவிர மற்ற அனைவரையும் சோ்த்துக் கொள்வோம்.

ஓ.பன்னீா்செல்வம் திமுகவின் கைப்பாவையாக உள்ளாா். பொதுக் குழுவை கூட்டுவது குறித்து தலைமைக் கழக நிா்வாகிகள் முடிவு செய்வா். மதுரையில் நடைபெறும் மாநாடு சிறப்பாக நடைபெறும்.

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி உள்ளது. கா்நாடகத்தில் எங்களை அடையாளப்படுத்துவதற்காக ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம் என்றாா் அவா்.

முன்னதாக, கட்சி அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.