அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் சமூக நீதியை புதைத்துவிட்டது திமுக - மதுரையில் அன்புமணி பேச்சு தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை உறுதி செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி தேவைதமிழ்நாட்டை போதை மாஃபியா ஆக்கிவிட்டது திமுக: பிரதமர் மோடி 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

சென்னையில் பரவலாக மழை: கோடை வெயில் தணிந்தது!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கோடை வெயில் தணிந்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 6:51 pm

DIN

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. கோடை வெயில் தணிந்துள்ள நிலையில் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பல மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. கோடை வெயில் 40 டிகிரி வரை சென்று வெயில் வாட்டி எடுத்தது. இதனால், மக்கள் பலரும் வெளியில் தலைகாட்டமுடியாத நிலை ஏற்பட்டது. 

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஏப்ரல் 26 வரை லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று லேசான மழை பெய்தது. சென்னை, எழும்பூர், சென்ட்ரல், புரசைவாக்கம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான மழை பெய்தது. 

இந்த மழையால் பூமி குளிர்ந்து, கோடை வெயில் சற்று தணிந்தது. லேசான மழை என்றாலும் மக்கள் அப்பாடா என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.