தான் பேசியதாக சமூக வலைதளங்களில் பரவும் ஆடியோ போலியானது என
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார்.
பொது சமூகத்தில் வில்லன் போல் என்னை சித்தரிக்க வேண்டும் என்பதற்காக இதுபோன்று பொய்யான தகவல்கள் பகிரப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக 26 நொடிகள் கொண்ட ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒரே ஆண்டில் 30 ஆயிரம் கோடி ஊழல் செய்து முறைகேடாக சம்பாதித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் பிடிஆர், என்னை இந்த அரசுக்கு எதிரான தனிப்பட்ட போராளி போல் சித்தரிக்க முயற்சி செய்கிறார்கள். நான் இந்த பொது வாழ்க்கையில் என்ன செய்தேனோ அதெல்லாம் முதல்வர் ஸ்டாலின் காரணமாக மட்டுமே. எங்களை பிரிக்க நடக்கும் சதிகள் எதுவும் வெற்றிபெறாது.
இந்த ஆடியோவிற்கு விளக்கம் அளிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். இந்த தவறான, பொய்யான ஆடியோவை அரசியல் தொடர்பற்ற சிலரும், ஊடகங்களும் விவாதித்து வருகின்றன. இந்த ஆடியோ முழுக்க பொய்யானது எனக் குறிப்பிட்டுள்ளார்.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கூறப்படும் ஆடியோ விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என். ரவியை இன்று மாலை தமிழக பாஜக குழு சந்தித்துப் பேசவுள்ளது. ஆடியோவை சுதந்திரமான தடயவியல் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்கள் ஆளுநரிடம் வலியுறுத்தவுள்ளதாகவும் தெரிகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அன்று முதல்வனை நிராகரித்த விஜய்... இன்று!

தவெக - காங்கிரஸ் கூட்டணியா? ராகுல் காந்தியின் பதிவு வைரல்!

எதிர்க்கட்சி இல்லாத புதுவை!

பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? ஆட்சிக் கணக்கு!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


