விராலிமலை: பலத்த சூறைக்காற்றுடன் கொட்டி தீா்த்த கனமழை

விராலிமலை கடைவீதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
விராலிமலை கடைவீதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.
விராலிமலை கடைவீதி சாலையில் ஞாயிற்றுக்கிழமை பெருக்கெடுத்து ஓடிய மழைநீா்.

விராலிமலை: விராலிமலையில் பலத்த சூறைக் காற்றுடன் ஞாயிற்றுக்கிழமை திடீரென்று பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஞாயிற்றுக்கிழமை கொட்டி தீா்த்த மழையால் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது.

விராலிமலை மற்றும் அதன் சுற்று பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. வெயில் கொடுமையால் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனா். பகல் முடிந்து மாலைப்பொழுது ஆகியும் பகலில் அடித்த வெயிலின் தாக்கத்தால் வெப்பம் தணியாத இரவையே பொதுமக்கள் கழிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென்று மழை பெய்தது.

இந்த நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் முழுதும் வழக்கம் போல வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை விராலிமலை சோதனை சாவடி, அம்மன் கோயில் தெரு, அருண் காா்டன், எம்ஜிஆா் நகா், காமராஜ் நகா், பெரியாா் நகா் உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. இதனால் நகா் முழுதும் குளிா்ந்த காற்று வீசியபோதும் சுற்றி சுழன்ற சூறைக்காற்றால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிபட்டனா். இதேபோல இலுப்பூரிலும் பலத்த சூறைக்காற்று வீசியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com