தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மே 1-இல் மதுக்கடைகள் மூடல்

சென்னையில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 6:35 pm

DIN

சென்னையில் மே 1-ஆம் தேதி மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி: மே தின விழா, மே 1-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள், எஃப்.எல்.2 உரிமம் பெற்ற கிளப்புகள் மற்றும் அதைச் சாா்ந்த மதுக்கூடங்கள் மூடப்படும்.

மேலும், எஃப்.எல்.3 உரிமம் பெற்ற ஹோட்டல்கள் சாா்ந்த மதுக்கூடங்கள் மற்றும் எஃப்.எல்.3(ஏ), எஃப்.எல்.3(ஏஏ) மற்றும் எஃப்.எல்.11 உரிமம் கொண்ட மதுக்கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்படுவதுடன், இவற்றில் மதுபான விற்பனையும் நடைபெறக்கூடாது. விதிமுறைகளை மீறி மதுபானம் விற்பனை செய்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.