தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சுத்தமல்லி அருகே விவசாயி வெட்டிக் கொலை!

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :3 ஆகஸ்ட் 2023, 12:23 pm

DIN

திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் விவசாயி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருநெல்வேலியை அடுத்த சுத்தமல்லியை சேர்ந்தவர்  கொம்பையா (55). விவசாயி. இவர் சுத்தமல்லி பகுதியில் வியாழக்கிழமை ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது வெட்டிக் கொல்லப்பட்டார். 

பக்கத்து வீட்டுக்காரரான கருத்தப்பாண்டி என்பவரின் நாய் தன் மகளை கடித்ததைத் தொடர்ந்து கொம்பையா சுத்தமல்லி காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார்.

இந்த நிலையில் இவர்களுக்குள் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கருத்தப்பாண்டி மற்றும் இருவர் சேர்ந்து கொம்பையாவை வெட்டியதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து  சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.