முதல்வர் ஸ்டாலின் ட்வீட் நீக்கப்பட்டது ஏன்? ராணுவம் விளக்கம்
தமிழ்நாட்டின் முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவை நீக்கியது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.


தமிழ்நாட்டின் முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய முதல்வர் மு.க. ஸ்டாலினின் பதிவை நீக்கியது குறித்து இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் ஃபுளோரா மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றதாக ராணுவத்தின் வடக்கு தலைமையகம் புதன்கிழமை டிவிட்டரில் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்த ட்வீட்டை மறுபகிர்வு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் மறுபகிர்வு செய்த ட்வீட்டை ராணுவத்தின் வடக்கு தலைமையகம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்.பி. கனிமொழி நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், முதல் பெண் ஜெனரல் குறித்த செய்தியை ராணுவத் தலைமையகம் பகிர்வதற்கு முன்னதாகவே வடக்கு தலைமையகம் பகிர்ந்ததால் ட்வீட் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது ராணுவ தலைமையகம் பகிர்ந்த ட்வீட்டை வடக்கு பிராந்திய தலைமையகம் மறுபகிர்வு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...