பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தூய பனிமய மாதா தங்கத் தோ் திருவிழா தொடங்கியது!

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனி சிறப்பு திருப்பலியுடன் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2023, 4:39 am

DIN


தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத் தேர் பவனி சிறப்பு திருப்பலியுடன் சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 441 ஆவது ஆண்டு திருவிழா, 16 ஆவது தங்கத் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. 

இதைத் தொடர்ந்து நாள்தோறும் இந்தியா முழுவதும் உள்ள ஆயர்கள் சிறப்பு திருப்பலி நிறைவேற்றினர். இத்திருவிழாவின் சிகர நிகழ்வான தங்கத் தேர்த்திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க நிகழ்வாக, காலையில் பங்குத்தந்தை குமார் ராஜா தலைமையில் முதல் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தங்கத் தேர் சிறப்பு திருப்பலியை, கோவா மறைமாவட்ட பேராயர் கர்தினால் பிலிப் நேரி தலைமை வகித்து நடத்தினார். தொடர்ந்து அன்னையின் தங்கத்தேர் பவனியை ஆயர்கள் தாமஸ் அக்குவினாஸ், இம்மானுவேல் ஃபர்னான்டோ ஆகியோர் அர்ச்சித்து தொடங்கி வைத்தனர். 

தங்கத் தோ் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் கூடியுள்ளதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 2000 போலீஸார் பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.