பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கருணாநிதி படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை!

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.

News image
கருணாநிதி படத்துக்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை
Updated On :7 ஆகஸ்ட் 2023, 8:19 am

DIN

தில்லி: நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.

முன்னாள் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருணாநிதியின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள திமுக எம்.பி.க்களின் அறையில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் புகைப்படத்துக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில், திமுக மாநிலங்களவை தலைவர் திருச்சி சிவா, திமுக மற்றும் காங்கிரஸின் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.