
கம்பம்: தேனி மாவட்டம், சுருளிஅருவியில் செவ்வாய்க்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பகத்தினர் அனுமதி அளித்தனர்.
தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது சுருளிஅருவி. இந்த அருவி ஆன்மீகத்தலமாகவும், சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் கடந்த ஆக.2ல், 2 குட்டிகளுடன் 8 யானைகள் சுருளிஅருவிக்கு செல்லும் வழியில் முகாமிட்டது.
யானைகளின் நடமாட்டத்தை பார்த்த வனத்துறையினர் அருவியில் குளிக்க மற்றும் வளாகப்பகுதிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதியளிக்கவில்லை.
7 நாள்களாக முகாமிட்ட யானைக்கூட்டம் செவ்வாய்க்கிழமை அதிகாலை உள் வனப்பகுதிக்கு சென்றது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்த வனத் துறையினர் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களை குளிக்க அனுமதியளித்தனர். சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியுடன் குளித்து சென்றனர்.
இதையும் படிக்க: கீழடி அகழாய்வில் எடைக் கல் கண்டெடுப்பு!
இதுபற்றி கம்பம் கிழக்கு வனச்சரகர் வி.பிச்சைமணி கூறியது, 7 - ஆவது நாளில் யானைக்கூட்டம் உள் வனப்பகுதிக்கு சென்றுள்ளது. அதனால் பொதுமக்களுக்கு குளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இருந்தாலும் அருவி வளாகப்பகுதி, தேக்கங்காடு, வெண்ணியாறு செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் வன ஊழியர்கள் கண்காணிப்பு செய்து வருகின்றனர் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







