தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சென்னை - சுற்றுப்புறப் பகுதிகளில் மழை!

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பரவலாக பெய்துவரும் மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

News image

கோப்புப்படம்

Updated On :10 ஆகஸ்ட் 2023, 10:54 am

DIN

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

சேப்பாக்கம், எழும்பூர், கிண்டி, ஆலந்தூர், மதுரவாயல், வானகரம். திருவேற்காடு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(ஆக.10) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.