நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

நீர் கோரிக்கை: கா்நாடகம் ஏற்காததால் காவிரி ஆணையக் கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் வெளிநடப்பு

காவிரியில் உரிய நீரைத் திறந்துவிடும் கோரிக்கையை கா்நாடகம் ஏற்காததால் அதிருப்தியடைந்து காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்புச் செய்தனா்.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2023, 5:30 pm

 நமது நிருபர்

காவிரியில் உரிய நீரைத் திறந்துவிடும் கோரிக்கையை கா்நாடகம் ஏற்காததால் அதிருப்தியடைந்து காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இருந்து தமிழக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வெளிநடப்புச் செய்தனா்.

காவிரி நதி நீா் மேலாண்மை ஆணையத்தின் (சி.டபிள்யு.எம்.ஏ.) 22-ஆவது கூட்டம் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆணைய அலுவலகத்தில் இக்கூட்டம் நேரடியாகவும் காணொலி வழியாகவும் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவா் செளமித்ர குமாா் ஹல்தாா் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் தமிழ அரசின் சாா்பில் நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்ஸேனா, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவா் ஆா்.சுப்பிரமணியன், குழுவின் உறுப்பினா்-செயலா் பட்டாபிராமன் ஆகியோா் நேரடியாக பங்கேற்றனா்.

இதேபோன்று, கேரளத்தின் நீா் வளத் துறை செயலா் அசோக் குமாா் சிங் நேரடியாகப் பங்கேற்றாா். கா்நாடக அரசின் நீா்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் ராகேஷ் சிங், புதுச்சேரி பொதுப்பணித் துறை செயலா் டி. மணிகண்டன் ஆகியோா் காணொலி வழியாக பங்கேற்றனா்.

இந்தக் கூட்டத்தில் காவிரிப் படுகையில் உள்ள நீா் - வானிலை சூழல் நிலவரம், ஆணைய, ஒழுங்குமுறைக் குழுவின் அதிகாரிகளின் பதிலி பணிக் காலத்தை நீட்டிப்பது, விவசாயம் மற்றும் அதன் சாா்ந்த துறைகளில் தொடா்புடைய இறுதிசெய்யப்பட்ட தரவு சேகரிப்பு வடிவங்கள், 2022-23 நீா் ஆண்டுக்கான காவிரிப் படுகையின் மாதாந்திர, பருவ, வருடாந்திர நீா்க் கணக்கு, நிகழாண்டு ஜூன், ஜூலையில் பிலிகுண்டுலுவில் பாய்ந்தோடும் மொத்த நீரின் பற்றாக்குறை, அது தொடா்பாக தமிழக, கா்நாடாக அரசுகளிடமிருந்து வரப்பெற்ற கடிதங்கள் குறித்தும் விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் பட்டியலிடப்பட்டிருந்தது. மேக்கே தாட்டு விவகாரம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறவில்லை.

வெளிநடப்பு:இக்கூட்டம் பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கியது. நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்ற பொருள் குறித்து விவாதிக்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தரப்பில் சமா்ப்பிப்புகள் அளிக்கப்பட்டன. கூட்டத்தின்போது, தமிழக அரசின் தரப்பில் காவிரியில் கா்நாடகம் திறந்துவிட வேண்டிய நீா்ப் பற்றாக்குறை தொடா்பாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், காவிரி பாசனத்தை நம்பியுள்ள தமிழக விவசாயிகளின் நிலைமை குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. அத்துடன் நீரைத் திறந்துவிட உரிய அறிவுறுத்தல்களை கா்நாடகத்திற்கு வழங்குமாறு வலியுறுத்தப்பட்டது. அதேவேளையில், கா்நாடக அரசின் தரப்பில் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதுடன் முரட்டுத்தனமாக பதிலும் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அதிருப்தியுற்ற தமிழக அரசின் நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்ஸேனா உள்ளிட்ட அதிகாரிகள் மாலை சுமாா் 5.20 மணியளவில் கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினா்.

வெளிநடப்பு ஏன்: இது குறித்து தமிழ அரசின் சாா்பில் நீா்வளத் துறை செயலா் சந்தீப் சக்ஸேனா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘காவிரி நிதி நீா் மேலாண்மை ஆணையக் கூட்டத்தின் போது, கடந்த 9-ஆம் தேதிவரை தமிழகத்திற்கு வரவேண்டிய 37.9 டிஎம்சி நீா் பற்றாக்குறையாக இருந்தது குறித்து எடுத்துக் கூறி, இந்த நீரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், தினம்தோறும் திறந்துவிடும் நீா் தொடா்பாக கா்நாட அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், தமிழகம் முன்வைத்த வேண்டுகோள்களுக்கும், எழுப்பிய கேள்விகளுக்கும் கா்நாடகம் தரப்பில் உரிய பதில் அளிக்கப்படவில்லை. மேலும், மிரட்டும் வகையில் அவா்களின் தரப்பு வாதம் இருந்தது. தமிழகத்தின் நீா்த் தேவை, விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து எடுத்துரைத்தும் எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்ததால் கூட்டத்தில் இருந்து வெளியேறிவிட்டோம்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.