உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்

சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  

Published On :2 பிப்ரவரி 2024, 8:18 am IST

சுதந்திர தினத்தையொட்டி 15 காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வரின் சிறப்புப் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சீரிய பணியாற்றிய கீழ்கண்ட 5 காவல்துறை அதிகாரிகளுக்கு 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியைப் பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான
தமிழக முதல்வரின் காவல் பதக்கம் வழங்கப்படும்:-
1. க. வெங்கடராமன், 
கூடுதல் காவல் துறை இயக்குநர்,
குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, சென்னை.
2. அஸ்ரா கர்க்,
காவல்துறை தலைவர்/ கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு
(வடக்கு),
சென்னை பெருநகர காவல்.
3. சு. ராஜேந்திரன்,
காவல்துறை துணைத் தலைவர்,
குற்றப்புலனாய்வுத் துறை நுண்ணறிவு, சென்னை.
4. ப.ஹீ. ஷாஜிதா,
காவல் கூடுதல் துணை ஆணையாளர்,
இணையவழி குற்றப் பிரிவு, சென்னை பெருநகர காவல்.
5. ஹா. கிருஷ்ணமூர்த்தி,
காவல் துணைக் கண்காணிப்பாளர், தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை,
சென்னை.
இதே போன்று புலன் விசாரணைப் பணியில் மிகச்சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்கண்ட 10 காவல் துறை அதிகாரிகள் 2023-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதல்வரின் காவல்
புலன் விசாரணைக்கான சிறப்புப்பணிப் பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்:-
1. வே. அனில் குமார், காவல் உதவி ஆணையர், கொங்கு நகர் சரகம், திருப்பூர் மாநகரம்.
2. கோ. சரவணன், காவல் துணைக் கண்காணிப்பாளர், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, மதுரை சரகம்.
3. ர. மாதையன், காவல் ஆய்வாளர், சூலூர் காவல் நிலையம், கோயம்புத்தூர் மாவட்டம்.
4. மா. அமுதா, காவல் ஆய்வாளர், பீலமேடு காவல் நிலையம், கோயம்புத்தூர் மாநகரம்.
5. ம. அனிதா, காவல் ஆய்வாளர், மாசார்பட்டி காவல் நிலையம், தூத்துக்குடி மாவட்டம்.
6. இரா. விஜயா, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்
7. ஆ. மகாலெட்சுமி, காவல் ஆய்வாளர், அனைத்து மகளிர் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்.
8. அ. சித்திராதேவி, காவல் ஆய்வாளர், இணைய குற்றப்பிரிவு, திருப்பூர் மாவட்டம்.
9. ந. மணிமேகலை, காவல் ஆய்வாளர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை பெருநகர காவல்.
10. மறைந்த காவல் ஆய்வாளர் கு. சிவா, குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுதுறை, திருச்சிராப்பள்ளி.
விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும், 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். மேற்கண்ட
விருதுகள், தமிழ்நாடு முதல்வரால் பிறிதொரு விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.