பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை!

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக இன்று சென்னை வந்தடைந்தனர்.

News image
மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் சென்னை வருகை
Updated On :14 ஆகஸ்ட் 2023, 9:07 am

DIN

மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறுவதற்காக இன்று சென்னை வந்தடைந்தனர்.

மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதம் வன்முறையாக வெடித்துள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக அந்த மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த நிலையில், ஆசிய விளையாட்டு, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் போன்ற தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க சாதகமற்ற சூழ்நிலை மணிப்பூரில் நிலவுவதால், அந்த மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாட்டிற்கு வருகை தந்து பயிற்சிகள் மேற்கொள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

தமிழக முதல்வரின் அழைப்பை ஏற்று தமிழகத்தில் பயிற்சி பெற 15 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மணிப்பூரைச் சேர்ந்த 10 வாள்வீச்சு வீரர்கள் - 5 வீராங்கனைகள் - 2 பயிற்சியாளர்களை விமானம் மூலம் இன்று சென்னைக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைத்து வந்தது.

அவர்கள் அனைவரும் சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.