கருணாநிதி நூற்றாண்டு விழா: ஆக.19-ல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்துவது தொடா்பாக, கட்சியினருடன் ஆக.19-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்துவது தொடா்பாக, கட்சியினருடன் ஆக.19-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறாா்.

இது குறித்து, கட்சியின் பொதுச் செயலாளா் துரைமுருகன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: முன்னாள் முதல்வா் கருணாநிதியை தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையினா் என்றென்றும் நினைவுகூரும் வகையில், அவரது நூற்றாண்டு விழா எழுச்சியோடு நடத்தப்பட உள்ளது.

இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் சனிக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கவுள்ளது.

முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நூற்றாண்டு விழாக் குழு உறுப்பினா்கள், அனைத்து அணிகளின் செயலா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோா் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com