திருச்சியில் 4 மையங்களில் சிவில் நீதிபதி தேர்வு

திருச்சி மாவட்டத்தில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வு நான்கு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.
தேர்வுப் பணிகளை ஆட்சியர் மா. பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேர்வுப் பணிகளை ஆட்சியர் மா. பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சிவில் நீதிபதி பதவிகளுக்கான தேர்வு நான்கு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு நீதித்துறை பணிகளில் சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்தில் இத் தேர்வுக்காக 4 மையங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்தத் தேர்வினை திருச்சி மாவட்டத்தில் எழுத 1,088 பேர் விண்ணப்பத்திருந்தனர். இவர்களில், 1000 பேர் மட்டுமே சனிக்கிழமை தேர்வு எழுதினர். 

தேர்வுப் பணிகளுக்கென 4 தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டது. வினாத்தாள் மற்றும் விடைத்தாள்களை தேர்வு மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை மேற்கொள்ள 2 இயங்கு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இக்குழுவிற்கு துணை வட்டாட்சியர் நிலையில் ஒரு அலுவலர், ஆயுதம் ஏந்திய ஒரு காவலர் பணியில் ஈடுபட்டனர்.

தேர்வு மையங்களை கண்காணிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், 9 ஆய்வு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வு நடைபெறுவதை பதிவு செய்திட விடியோகிராபர்கள் பணியில் ஈடுபட்டனர்.  தேர்வுப் பணிகளை ஆட்சியர் மா. பிரதீப்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அனைத்து தேர்வு மையங்களிலும் காவல்துறை மூலம் பாதுகாப்புப் பணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் தேர்வு மையங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com