அரியலூர் அருகே விவசாயி கொலை!
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை விவசாயி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரியலூர்: அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர் அருகே செவ்வாய்க்கிழமை காலை விவசாயி ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கீழப்பழுவூர் அடுத்த வாரணாசி அருகேயுள்ள கரையான்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ரா. மணி(63). விவசாயியான இவர் செவ்வாய்க்கிழமை காலை தனது வயலில் மர்ம நபர்களால் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் உடலை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவருக்கு மனைவி ராணி, மகன் ரமேஷ், பிரதீப் ராஜ், மகள் பிரேமா ஆகியோர் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...